பூச்சி மேலாண்மை
கால்நடையில் பூச்சி மேலாண்மை
ஈக்கள்
ஈக்கள் என்பவை ஒரு ஜோடி இறக்கைகள் கொண்டவை. இவை முட்டை, புழு, கூட்டுப்புழு மற்றும் பூச்சி என முழுமையான வாழ்க்கை சுழற்சியைப் பெற்றுள்ளன. ஈக்களில் 20 குடும்பங்களைச் சார்ந்தவை கால்நடை முக்கியத்துவம் வாய்ந்தவை. இதன் முக்கிய பண்பு இவை கால்நடைகளின் மீது குறுகிய (சிறிது) காலத்திற்கு மட்டுமே இருக்கும். எனவே தேவையான தடுப்பு முறைகளை மேற்கொள்வது கடினம். எனினும் சரியான சமயத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இரத்தம் உறிஞ்சும் ஈக்கள்
கறுப்பு ஈக்கள்
இவை சிறிய அளவில் கருமை நிறத்தில் சற்று பருமனான முதுகுப்பகுதி மேலெழுந்தவாறு கூடிய உடலமைப்பைப் பெற்றவை. பெண் ஈக்கள் பகல்நேரங்களில் இரத்தம் உறிஞ்சுபவை. இவ்வீக்கள் கால்நடைகளின் முகம், காது, மூக்ககளின் அருகே அடிக்கடி வட்டமிட்டுக் கொண்டே இருக்கும் தோலில் கடித்து எரிச்சலை ஏற்படுத்தும். இக்கொசுக்களின் எண்ணிக்கை பெருகினால் அது கால்நடைகளில் இரத்தசோகை (இடிப்பு) ஒவ்வாமை போன்ற நோய்களுக்குக் காரணமாவதோடு சில சமயங்களில் இறப்பும் நிகழும்.
![PestMgt_Blackfly](images/pest mgt cattle_clip_image001_0001.jpg)
படம் 1: கறுப்பு ஈ
பெண் கறுப்பு ஈயானது பாறைகள் போன்ற திடப்பொருட்களின் மீது முட்டையிடும். இதிலிருந்து வெளிவரும் புழு பாறைகள் அல்லது நூல் போன்ற (புற்கள்) தாவரங்களின் மீது ஒட்டிக் கொள்ளும். புழுவிலிருந்து கூட்டுப்புழு உருவாகும் காலம் தட்பவெப்பநிலையையும், ஈயின் இனத்தையும் பொறுத்து வேறுபடும். கூட்டுப்புழுவிலிருந்து வெளிவரும் பூச்சி அது உருவாகும் இடத்திலிருந்து 7-10 மைல் தொலைவு வரை பறக்கக்கூடியது.
கொம்பு ஈ
இந்த ஈக்கள் கடிப்பதால் வலி, தொந்தரவு, உணவு உண்ணுதல் ஓய்வு போன்ற தினசரி நடவடிக்கைகள் பாதிக்கப்படும். இவை இரத்தம் உறிஞ்சுவதற்காக தோலை கடித்து வலி ஏற்படுத்துகிறது. இவ்வாறு அடிக்கடி கடிப்பதால் உடல் எடை இழப்பு, பால் உற்பத்தி குறைவு, போன்றவை ஏற்படும். இந்த ஈக்கள் முதுகிலும், பின் பகுதிகளிலும் கூட்டமாக காணப்படும். இவை ஊசிபோன்ற வாய்ப்பாகத்தை உட்செலுத்தி இரத்தத்தை உறிஞ்சுவதால் பித்தப்பை நோய் போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.
![PestMgt_Hornfly](images/pest mgt cattle_clip_ horn fly.jpg)
படம் 2: கொம்பு ஈ
ஒரு மாடு அல்லது எருமையின் மீது 50 அல்லது சிறிது அதிகமாக இருக்கலாம். ஆயினும் 10000 எண்ணிக்கையில் இருந்தால் அதிகளவு இரத்தம் வீணாவதால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புண்டு.இந்த வகை ஈக்கள் கால்நடைகளின் சாணத்தில் இடப்படுகின்றன. இவை சாணங்களை உணவாக உண்டு 3-5 நாட்களில் 3 படிநிலைகளாகக் கடந்து வளர்ச்சியடைகின்றன. கூட்டுப்புழுக்காலம் 3-5 நாட்கள் ஆகும். வெளிவரும் பூச்சியானது 3 நாட்களில் முட்டையிடும் இனச்சேர்க்கை முடிந்தபின் ஒரு பெண் ஈ 200 முட்டைகள் வரை இடும். முட்டையிலிருந்து அடுத்த ஈ வெளிவர 10-14 நாட்கள் வரை ஆகும்.
வளர்ந்த பெண் ஈக்கள் ஒரு நாளைக்கு 20 முறை வரை அடிக்கடி உணவு உட்கொள்ளும். எனவே பகல் மற்றும் இரவு வேளைகளில் கூட இவை கால்நடைகளின் மீதமாநடது இரத்தத்தை உறிஞ்சும். முட்டையிடும் நேரம் தவிர பெண் ஈக்கள் பிற நேரங்களில் கால்நடைகளின் மீதுதான் இருக்கும். எனவே கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொள்வது எளிது. பொடி தூவுதல் மருந்து தெளித்தல் நீரில் அமிழ்த்துதல் போன்ற முறைகளின் மூலம் நல்ல பயனைப் பெறலாம். உணவுப் பொருட்களில் புழுக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல் நலம்.
குதிரை மற்றும் மான் ஈக்கள்
இந்த வகை ஈக்கள் கொசுவைப் போல் பெண் ஈக்கள் மட்டுமே இரத்தத்தை உறிஞ்சுபவை. இவை பொதுவாக பகலில் மட்டுமே கடிக்கும். எனினும் திரும்பத்திரும்ப ஒரே இடத்தில் கடிப்பதால் கால்நடைகளில் எடை இழப்பும், பால் உற்பத்திக் குறைவும் ஏற்படுகின்றன. இவை கடிக்கும்போது அதிக வலியெடுப்பதால் கால்நடைகள் அதிலிருந்து தப்பிக்க குதித்தல், ஓடுதல் போன்ற ஆவேசமான செயல்களை மேற்கொள்ளும்.
|
|
படம் 3: கொம்பு ஈ |
படம் 4: மான் ஈ |
இந்த ஈக்கள் மாடுகளில் துளையிட்டு இரத்தத்தை உறிஞ்சும்போது இரத்தம் உறையாமல் இருக்க ஒரு வகை மருந்தை காயத்தின் மீது சுரக்கின்றது. இதனால் காயங்களிலிருந்து இரத்தம் உறையாமல் வடிந்து கொண்டே இருக்கும். இக்காயங்கள் நோய்களைப் பரப்பும் பலவிதக் காரணிகளுக்கு உரைவிடமாகின்றன. இவை அடைப்பானி நோய், பித்தப்பை நோய், முயல் உண்ணி நோய் போன்ற நோய்கள் பரவக் காரணமாகின்றன.
மணல் ஈக்கள் மற்றும் கடிக்கும் கொசுவினப் பூச்சிகள்
இவை மிகச்சிறிய அளவுடைய கடிக்கும் பூச்சிகள். இப்பூச்சிகள் நீரில் வளர்கின்றன. கட்டுப்படுத்துவது கடினம். பூச்சிகள் அடிக்கடி முகப்புறத்தில் வந்து தொந்தரவளிக்கும். எண்ணிக்கையில் அதிகரிக்கும் போது மூச்சுத்தினறல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் ஒரு இனப்பூச்சிகள் நீலநாக்கு நோயை ஏற்படுத்தும் வைரஸ் கடத்தியாகச் செயல்படுகின்றன. மேலும் சில பூச்சிகள் புழுக்களின் இருப்பிமாகின்றன.
![PestMgt_SandFly](images/pest mgt cattle_clip_image sandfly.jpg)
படம் 5: மணல் ஈ
தொழுவ (லாய) ஈக்கள்
தொழுவத்தில் காணப்படும் இவ்வீக்கள் வீட்டு ஈக்களைப் போலவே தோற்றத்திலும், நிறம் மற்றும் அமைப்பிலும் காணப்படுகின்றன. ஆனால் வாய் அமைப்பு சற்று வேறுபட்டிருக்கும். இவ்வகை ஈக்களில் ஆண், மற்றும் பெண் என இருஇன ஈக்களுமே பாடுகளைக் கடிக்கின்றன. இவை உற்பத்தியாகும் இடத்திலிருந்து பலமைல் தூரம் வரை பறந்து செல்லும் திறன்மிக்கவை.
![PestMgt_Stable Fly](images/pest mgt cattle_clip_image007_0001.jpg)
படம் 6: தொழுவ ஈ
இவை மாடுகளுக்குத் தொந்தரவளிப்பதோடு, கடிக்கும்போது மிகுந்த இரத்த இழப்பை ஏற்படச்செய்யும். இந்த கடிபட்ட பகுதியின் வழியே நோய்க்காரணிகள் உட்புக (வழிவகுக்கிறது) ஏதுவாகிறது. இவையும் அடைப்பான் பித்தபை நோயைப் பரப்புக் கிருமிகளைக் கடத்துகின்றன.
இரத்தம் உறிஞ்சாத ஈக்கள்
கால்நடைப் புழுக்கள்
இரண்டு வித கால்நடைப் புழுக்கள் காணப்படுகின்றன. சாதாரன கால்நடைப்புழு மற்றும் வடக்கு கால்நடைப் புழுக்கள் சாதாரன கால்நடைப் புழுவானது மாட்டின் மீது காணப்படும் முடியில் முட்டையிடுகிறது. எந்த ஒரு வலியும் ஏற்படுத்துவதில்லை.
![Pest_mgt_cattle Grub](images/pest mgt cattle_clip_image001_0002.jpg)
படம் 7: கால்நடைப் புழு
இப்புழுக்களால் மாட்டின் பால் உற்பத்தி 10-20 சதம் பாதிக்கப்படுகிறது. மேலும் எடை இழப்பும் ஏற்படுகிறது. புழு பாதித்த கால்நடைகளின் இறைச்சி மஞ்சள் கலந்த பச்சைநிறமாக மாறிவிடுவதால் அதன் மதிப்பு குறைகிறது. அதோடு தோலில் சிறுசிறு துளையில் பட்டிருப்பதால் துளையின் மதிப்பு குறைகிறது.
சரியான சமயத்தில் புழுக்களைக் கட்டுப்படுத்துவது அவசியம். புழுக்கள் குழிப்படிப்பான் அல்லது முதுகெலும்பை அடையும் முன்னரே கொல்லப்பட வேண்டும். ஏனெனில் இப்பகுதியில் மருந்தைப் பயன்படுத்தினால் பக்கவாதம் அல்லது வீக்கம் ஏற்படும் கால்நடை இறக்க நேரிடலாம்.
தெளிப்பு முறை, அமிழத்துதல், உணவில் கலந்து கொடுத்தல் மற்றும் மருந்து ஊற்றுதல் போன்று பல வழிமுறைகள் இப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் மருந்து கொடுக்க இருக்கின்றன. எனினும் மருந்து ஊற்றுதல் முறையே நல்ல பலன்தருகிறது.
ஈ புழுக்களின் தாக்கம்
கீடநோய் என்பது மிதவெப்ப விலங்குகளின் இரத்தத்தில் திசுக்களில் ஈபுழுக்கள் வசிப்பதாகும். பலவகை ஈக்கள் இதுபோன்று உள்ளன. இவ்வாறு உயிருள்ள சதையில் வாழும் (புழுஉயிரினம்) திருகுப்புழு ஆகும். இவை மாட்டினுள்ளேயே வளர்ந்து அதனை மலடாக்குகிறது. வளர்ந்த ஈ பின்பு வெளியில் பறந்துவிடும்.
பிற இனம் புழுக்கள் மற்றும் இறைச்சி ஈக்கள் இறந்த (விலங்குகள்) கால்நடைகளில் இறைச்சி மீது முட்டையிடுகின்றன. இவை சிறிதளவு பாதிப்பு ஏற்படுத்தினாலும் இறந்த உடல்களின் மீது மட்டுமே உட்கொள்ளுகின்றன.
பேன்
பெரும்பாலான பேன்கள் புற ஒட்டுண்ணிகள், இவை தனது வாழ்நாள் முழுவதும் ஏதேனும் உயிரினத்தின் மீது ஒட்டிக்கொண்டு உயிர்வாழ்கின்றன. விலங்கினத்தைச் சார்ந்துள்ளது. கால்நடையின் பல்வேறு இனங்களில் ஒரே வகைப் பேன்கள் காணப்படும். ஆனால் இதே பேன்கள் பன்றி, குதிரைகளில் காணப்படுவதில்லை. ஒவ்வொரு பேனும் அந்தந்த கால்நடையைச் சாரந்துள்ளது.
5 வகை இரத்தம் உறிஞ்சும் பேன்கள் (படம் 8) மற்றும் ஒரு வகை கடிக்கும் பேன்கள் (படம் 9) கால்நடைகளில் காணப்படுகின்றன. இரத்தம் உறிஞ்சும் நீண்ட மூக்குக்கொண்ட கால்நடைப் பேன், குறுகிய மூக்கு கொண்ட கால்நடைப் பேன், கால்நடை வால் பேன் போன்றவையும், கடிக்கும் பேனும் கால்நடைகளுக்கு அரிப்பு வலியை ஏற்படுத்துகின்றன. பேன்கள் குளிர்காலங்களில் அதிகமாகப் பெருகும். எனவே எண்ணிக்கையைக் குறைக்க தக்க சமயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பேன்கள் அதன் ஒட்டுண்ணியின் வெப்பநிலையைப் பொறுத்தும் வேறுபடும்.
![PestMgt_Long Nosed Louse](images/pest mgt cattle_clip_image003_0001.jpg)
படம் 8: பெரிய மூக்குடைய கால்நடைப்பேன்:
![PestMgt_Biting louse](images/pest mgt cattle_clip_image002_0006.jpg)
படம் 9 கடிக்கும் பேன்கள்
பேன்கள் ஒரு கால்நடையிலிருந்து மற்றொன்றிற்கு எளிதில் பரவுகின்றன. ஒரு மந்தையிலிருந்து மற்றொரு மந்தைக்கு கால்நடைகளை மாறும்போதோ அல்லது சில வகைப்பேன்கள் பறவை ஈக்களில் தொற்றிக் கொண்டோ சென்று பரவுகிறது.பேன்கள் கடிக்கும்போது கால்நடைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. கடிக்கும் பேன்கள் முடியுள்ள பகுதியில் ஒட்டிக்கொண்டு இரத்தத்தை உறிஞ்சுகின்றன. இவ்விடங்களில் அரிப்பு எற்படுவதால் மாடுகள் எங்கேனும் சென்று உராயும். இதனால் அப்பகுதியில் காயங்கள் ஏற்படுவதோடு அப்பகுதியில் முடி உதிர்ந்து விடும். உடல் எடை குறையக்கூடும் (சரியான ஊட்டச்சத்தின்றி) பேன்கள் எண்ணிக்கையில் பெருகும்போது அதிக இழப்பை ஏற்படுத்துவதால் இரத்தசோகைநோய் ஏற்பட்டு அது கருச்சிதைவிற்குக் காரணம் ஆகலாம்.
கால்நடைகள் அடிக்கடி எங்கேனும் உராய்ந்து கொண்டு இருந்தால் பேன் தொல்லையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தினாலும் சரியான பலன்தருவதில்லை. ஏனெனில் பூச்சிக்கொல்லி பயன்படுத்திய பின்பு 8-12 நாட்கள் கழித்தே முட்டையிலிருந்து குஞ்சுகள் பொரிக்கும். எனவே முதல் பூச்சிக்கொல்லி அளித்து பின் 2 வாரங்களுக்குப் பின் மீண்டும் பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தவேண்டும். புதிதாக மந்தையில் சேர்க்கப்படும். மாடுகளில் பேன் தொந்தரவு உள்ளதா என்பதைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
![PestMgt_Tail louse](images/pest mgt cattle_clip_image004_0000.jpg)
படம் 10 வால் பேன்
கால்நடை வால் பேன்களின் முட்டைகள் 40 நாட்கள் வரை உயிர்வாழும் திறன் பெற்றவை. கோடைக்காலங்களில் இந்த பேன்கள் அதிகஅளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே முதல் தடவை பூச்சிக்கொல்லி பயன்படுத்தியபின் 3 வாரங்கள் கழித்து மீண்டும் ஒருமுறை பயன்படுத்த வேண்டும்.
சிறு பூச்சிகள்
மாட்டின் தோலில் 0.1-1” நீளமுள்ள சிறு துளையிட்டு தோலின் அடிப்பகுதியில் அல்லது மேற்பரப்பில் உள்ளவற்றை உணவாக எடுத்துக் கொள்கின்றன. இந்த துளைகள் மிகச்சிறிய ஓட்டைகளாக இருக்கும். இந்த ஓட்டையிலிருந்து வெளிவரும் திரவமானது (முடிச்சுகளை) ஏற்படுத்துகிறது. உருண்டை போன்று உருவாகிறது. இப்பகுதியில் அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய ஒரு வகை நச்சும் வெளியிடப்படுகிறது. பாதிக்கப்பட்ட இடங்களை மாடுகள் சுவற்றில் அல்லது மரத்தில் உராய்வதால் புண்களில் எரிச்சல் ஏற்படுகிறது. இப்பகுதியில் ஒரு சில முடிகளே இருக்கும். இந்த (புண்கள்) பாதிப்பு உடல் முழுவதும் பரவிவிடும். எனவே எல்லா கால்நடைகளுக்கும் சிகிச்சை அளித்தல் சிறந்தது.
![PestMgt_Itch mite](images/pest mgt cattle_clip_image005_0001.jpg)
படம் 11. சிறு பூச்சி
கொசுக்கள்
கொசுக்கள் ஊசிபோன்று இரத்தத்தை உறிஞ்சும் உயிரிகள் பெண் கொசுக்கள் முட்டையிடுவதற்காக மட்டுமே இரத்தத்தை உறிஞ்சுகிறது. எனினும் இவை கடிக்கும்போது அதிக வலி ஏற்படுகிறது. மேலும் அதிக இரத்த இழப்பால் கால்நடைகள் இறந்து விடவும் கூடும். அல்லது உடல் எடை இழப்பு மற்றும் பால் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது.
![Pest_mgt_Moesquito](images/pest mgt cattle_clip_image006_0002.jpg)
படம் 12. கொசு
கொசுக்களைக் கட்டுப்படுத்த முதலில் அது உருவாகும் இடத்தினைச் சுத்தம் செய்ய வேண்டும். நீர்த்தேக்கங்கள் ஏதும் அருகில் இருப்பின் அதனை நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். புகைமூட்டுதல், காற்றில் நீர்த்திவலைகளாக தெளிப்பதன் மூலமும் கொசு மருந்தை பயன்படுத்திக் கொசுகளை அளிக்கலாம்.
|